கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.