எதிர்வரும் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கு அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஃவ்ரல் (PAFFREL), கஃபே(CAFFE), சி.எம்.ஈ.வி(CMEV), உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
02 கண்காணிப்புக் குழுக்களுக்கு மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் ஏனைய அமைப்புகள் வெளிப்புற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தற்போது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.