நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை நேற்று (04) சந்தித்திருந்தார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த விஜயத்தின்போது சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.