நியூசிலாந்து, ஆக்லாந்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளபெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த வெள்ள நீரில் சுமார் 2,000 பேர் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்லாந்து விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.