follow the truth

follow the truth

January, 25, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு முட்டை விற்ப​னை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு முட்டை விற்ப​னை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Published on

வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

தெஹிவளையில் பகுதியில் கட்டுப்பாட்டு விலையையும் மீறி அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் கொழும்பு பிரதேசங்களுக்கு முட்டைகளை கொண்டு வந்து விநியோகிக்கும் பிரதான வர்த்தக நிறுவனத்திற்கும மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மற்றும் சில்லறை முட்டைகளை விற்பனை செய்யும் கடையொன்றிற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எதிர்காலத்தில் மீனும் இறக்குமதி செய்யப்படலாம்” – சுனில் ஹந்துன்நெத்தி

எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர்...

கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற திட்டமிடலே பொலன்னறுவை வெள்ளப் பெருக்கை சந்திக்க காரணம் – மைத்திரி

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி...

மன்னார் காற்றாலை திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம் 

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள்...