follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

Published on

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளுக்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்கவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருந்துகளை கொள்வனவு செய்வதில் பல முறைகேடுகள், ஊழல்கள் இடம்பெறுகின்றன என்றுஅரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளிடம் இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நோயாளிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்பதை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார...

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை...

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...