உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த மனுவை ஆராய எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதியிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.