follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுகுறைந்த செலவில் பிரமாண்டமாக 'சுதந்திர தின விழா'

குறைந்த செலவில் பிரமாண்டமாக ‘சுதந்திர தின விழா’

Published on

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தை கொண்டாடுவது தொடர்பான முன் கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவது அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகார சபைகளின் பொறுப்பாகும் எனவும், அதற்காக தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து உண்மையில் செலவு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கான செலவீனங்களை குறைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திர தின விழாவை ஒட்டி ஜனவரி 2ம் திகதி முதல் 19ம் திகதி வரை பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, பாதுகாப்பு வெளிவிவகார, கல்வி, பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் , ஊடகங்கள் , நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி உள்ளிட்ட வரி நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த ஆண்டு மக்காச்சோள இறக்குமதியை குறைக்க நடவடிக்கை

அடுத்த வருடம் இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் அளவை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன்களாக குறைக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகின்...

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (23ஆம்...