இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு
இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
அதானி பங்குச் சந்தையையும் கணக்குகளையும் ஏமாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
அதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் அதானியின் பங்குச் சந்தை மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதானி நிறுவனம் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறுகிறது. சம்பந்தப்பட்ட அறிக்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெளதம் அதானி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் அதானி. கௌதம் அதானி ஆசியாவின் கோடீஸ்வரரும் கூட. ஃபோர்ப்ஸ் தரவரிசையின்படி, அவர் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 03 வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.