அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது.
2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு பின் சில வாரங்களுக்குள் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படவு;ளார் என மேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்படுவதுடன் ட்ரம்புக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மேட்டா தெரிவித்துள்ளது.