தனக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தக அமைச்சினை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எவ்வாறாயினும், அமைச்சு எதையும் வழங்காது என ஜனாதிபதி அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் அமைச்சரவையை விஸ்தரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த அறிக்கையை நிராகரித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தாம் யாரிடமும் அமைச்சுப் பதவியைக் கேட்கவில்லை எனவும், செய்தி வெளியிடுவதற்கு முன்னர் தனது கருத்தைக் கேட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.