பெப்ரவரி முதல் வாரத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் மூன்று அமைச்சுப் பதவிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களை தமக்கு மேலும் உள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்த வஜிர அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இந்த புதிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஸ்.எம் சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சி.பி.ரத்நாயக்க ஆகியோர் இந்த புதிய அமைச்சுப் பதவியை வகிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.