முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் ஊடாக சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அலி சப்ரி,சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தநிலையில் வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை பெறுவதற்கான தற்போதைய கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தாம் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக இலங்கை சவுதி அரேபியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது. எனவே அதை வலுப்படுத்த முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.