100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை மற்றும் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
அதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய காலநிலையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.