ஏற்றுமதி இறப்பர் விரிப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை காரணமாக இறப்பர் விரிப்பு கொள்வனவு மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இறப்பர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் உள்ளூர் டயர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் இறப்பரின் விலை அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் இறப்பரின் விலை அதிகரிக்கலாம் என இறப்பர் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த சிறிவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.