நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று(24) தீர்ப்பளித்தது.
மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர்.