வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் தயாரித்து அச்சடிக்க அனுப்பிய பின், வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கத் தயாராக உள்ளதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.
டெய்லி சிலோன் மேற்கொண்ட விசாரணையின் போது, வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான தாள்கள் கையிருப்பு தனது நிறுவனத்தில் உள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சடிக்கும் பணி ஏற்கனவே அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.