follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பு- கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கொழும்பு- கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

Published on

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள் காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் குருணாகல் வரை பயணித்து, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து அல்லது கேகாலை வரை பயணித்து பொல்கஹவெல, அலவ்வ, மீரிகம, பஸ்யால ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் போது, பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம ஊடாக குருணாகல் வழியாக கண்டி நோய்யி பயணிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...