follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉள்நாடுதேர்தல் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை

தேர்தல் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை

Published on

நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, வர்த்தமானி மூலம் அறிவிப்பதே சட்டம் என மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்தார்.

21ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர் புதன்கிழமை (25) அரசியலமைப்பு பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா, இவ்வாறானதொரு சூழ்நிலையில் வர்த்தமானி அறிவித்தல் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென திரு.பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

தேர்தல் திகதியை தீர்மானித்தல் போன்ற முக்கிய பணிகளுக்கு முழு ஆணைக்குழுவும் தேவை என தெரிவித்த மஹாநாம ஹேவா, தேர்தல் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறுவதன் மூலம் மறைமுகமாக என்ன தெரிவிக்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...