விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் “கொவிஹதகெஸ்ம” திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ மேலதிக பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படும் பாசிப்பயறு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சிணைகள் குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) சென்றிருந்தார்.
மேலதிக பயிர்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறிப்பாக,அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான சந்தை இல்லாதது,உரம் மற்றும் விதைகளின் பற்றாக்குறை,அறுவடை முறைகளை பிற்படுத்துவதிலுள்ள சிக்கல்கள்,பாசிப்பயறுச் செய்கைக்கு ஒத்தான சேனா பூச்சிகளைப் போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன