உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தற்போதைய அரசாங்கம் வெறும் பேச்சுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், போரையும், கொரோனா தொற்றையும் முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியும் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.