follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகாயமடைந்தவர்களை அழைத்து வர ஹெலிகொப்டர் தயார் நிலையில்

காயமடைந்தவர்களை அழைத்து வர ஹெலிகொப்டர் தயார் நிலையில்

Published on

UPDATE நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதன் பிரகாரம் எம்ஐ 17 ரக ஹெலிகொப்டரை ரத்மலானை விமானப்படை தளத்தில் விமானப்படை தயார் செய்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

————————————————————————-

நானுஓயா – ரதல்ல பகுதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் முச்சக்ககர வன்டியொன்றும் மோதி விபத்துள்ளாகினதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 53 மாணவர்கள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் , முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக. நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த 53 மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இவர்களில் காயங்களிற்கு உள்ளானவர்களை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வருவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நானுஓயா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை, நுவரெலியா – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...