follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு

Published on

கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(21) காலை 11 மணி முதல் இரவு 08 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு – தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...