உலக அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய பண, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளன.
உலகின் கோடீஸ்வரர்கள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த பென்டோரா பேப்பர்ஸ் இல் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்ட நபர்களின் இரகசிய விவகாரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன
இவ்வாறு வெளியாகியுள்ள பெயர் பட்டியலில் இலங்கை அரசியல்வாதி ஒருவரின் பெயரும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த அரச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராளபக்ஸவின் பெயரும் இந்த பென்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகியுள்ளது.
Pandora Papers எனப்படும் இந்த அதிர்ச்சியான ஆவண தொகுப்பில் கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகத் தலைவர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முழுமையான தகவல்களுக்கு – https://www.icij.org/investigations/pandora-papers/power-players/?player=nirupama-rajapaksa