இலங்கையின் எண்ணெய் கொள்முதலுக்கு நிதியளிப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டப் போவதாக தி சண்டே மோர்னிங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான ஆவணம் தற்போது வரைவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது