உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து Fonterra Brands Sri Lanka, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 69,102 பால்மாக்களை வழங்கியுள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் (Michael Appleton) மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகள் குழுவின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அடையாளமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
நன்கொடையாக பெறப்படும் பால்மாவை பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் சுரேன் படகொட, நியூசிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ ட்ராவலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.