பாடசாலைகளுக்கு பஸ்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பில் இப்போது விவாதம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்குவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
“நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவுமாறு அரசாங்கமே கேட்டுக் கொண்டது. இதுவரை எழுபது அரசப் பாடசாலைகளுக்கு பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் யாரும் உதவி பெறுவதில்லை. பேருந்துகள் தானம் பற்றி தனியாக விவாதம் நடத்தலாம். பதில் சொல்கிறேன். தேர்தலின் போது பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி ஓட்டு கேட்பது நல்லது. பாடசாலை மாணவர்களுக்கு பேருந்துகள் கொடுப்பது நல்லதல்ல..”
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க; பேருந்து வழங்குவதை நான் விமர்சிக்கவில்லை. பேருந்துகள் வழங்கிய பின்னர் ஜேவிபி அடுத்தவாரம் கூட்டத்தை நடத்தி விமர்சிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.