கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றியது போல் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை மூளையால் விரட்டியடிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ சர்வாதிகாரியாக மாறி அவரை ஒடுக்குவார் என்று தான் முதலில் நினைத்ததாகவும், இறுதியில் அவர் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தாத சகல சூழ்ச்சிகளையும் சதிகளையும் தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஜனவரி மாத இறுதிக்குள் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் எனவும், மக்கள் வீதிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.