follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுபற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பெப்ரவரியில்

பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பெப்ரவரியில்

Published on

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கையில் இந்த மருந்துகள் பெறப்படுவதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அரிதான மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம வைத்தியசாலை உட்பட தீவின் புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,

தேசபந்து நீதிமன்றில் ஆஜர்

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த...