follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉலகம்நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை

நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை

Published on

நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதி கிடைக்காது.

வங்கி விதியின் கீழ் வெளிநாட்டில் யாரும் இது போன்ற பணம் செலுத்துவதில் ஈடுபடக்கூடாது. இந்த விதியை யாராவது மீறினால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தின் மத்திய வங்கி பணப்புழக்க நெருக்கடியை காரணம் காட்டி வாகனங்கள் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான நிலையத்தில் கட்டித்தழுவி வழியனுப்ப கட்டுப்பாடு

நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில்...

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்காவில் டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து – 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்...