follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடு46 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

46 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Published on

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்து பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இந்த ஆட்கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் ஒருவரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா முதல் வெவ்வேறு தொகை பணம் அறவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின்...

வெளிநாட்டவர்கள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

பத்து வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை...