follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுதாமரை கோபுரத்தை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை

தாமரை கோபுரத்தை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை

Published on

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் அதன் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சேதப்படுத்திய பலரை அடையாளம் கண்டுள்ளதாகவும் இனிமேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி பிம்சர ரொசைரோ இதனைத் தெரிவித்தார்.

அவ்வாறான செயல்களைச் செய்த மூன்று பேரை இங்குள்ள பொலிஸ் பிரிவில் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்...

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில்...