ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களான முரசாமே (Murasame) மற்றும் காகா (Kaga) ஆகிய இரண்டு கப்பல்களும் இன்றையதினம் (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து இந்தக் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முரசாமே மற்றும் காகா ஆகிய இரு போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.