சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் மற்றும் நிதி வழங்கல் என்பன இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் இன்று (12) நடைபெற்ற Voice of Global South Summit G20 இல் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க தலையீடு தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.