வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கொவிட் விதிகளை கடுமையாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சீன பிரஜைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்ததன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இன்று (09) முதல் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாய்லாந்து அதிகாரிகள் அந்த விதியை நீக்க கடந்த ஆண்டு அக்டோபரில் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆனால் சீனர்கள் மூலம், கொவிட் தொற்றுநோய் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடுக்க மீண்டும் குறித்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.