உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இரண்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் படையின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வத்தகல மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர ஆகியோரினால் இந்த இரண்டு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என இடைக்கால மனுவை தாக்கல் செய்த சட்டத்தரணிகளான சுனில் வட்டகல மற்றும் எரங்க குணசேகர ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த மனுவை பராமரிப்பதற்கு நியாயமான சட்ட அடிப்படை உள்ளது என்பதை மனுதாரர் நிறுவத் தவறிவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மனுவின் மூலம் தவறான தகவல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.