தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.
தினமும் முச்சக்கரவண்டி கோவிலுக்கருகில் நிறுத்தப்படுவதோடு, தலவாக்கலை லிதுல நகரசபை ஊழியர்கள் ஊரை சுத்தம் செய்ய வந்தபோது முச்சக்கரவண்டிக்குள் சிறு குழந்தை அழும் சத்தம் கேட்டு முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் குழந்தையொன்று இருந்துள்ளது.
பிறந்து 12-14 நாட்களே ஆன குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தலவாக்கலை பொலிஸ் அதிகாரியினால் தாய்ப்பாலை வழங்கியதையடுத்து குழந்தை லிதுல மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.