விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
“ஹைபர் சொனிக் (Hypersonic) மற்றும் பெலஸ்டிக் வகையைச் சேர்ந்த இரண்டு ஏவுகணைகளே இவ்வாறு பரீட்சீக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.