இயற்கை உணவுகள் மற்றம் பாரம்பரிய உணவுகளை பெற்றுக் கொள்வதில் தற்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த கொவிட் நெருக்கடி காலத்திலும் மக்கள் இயற்கை உணவுகளை தேடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஊரடங்கு நிலையிலும் மக்கள் இணையவழி மூவமாகவும் இயற்கை உணவுகளை பெறுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் இயற்கை உணவுப் பொருள் நுகர்வும் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதன்படி யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய உணவுகளை விநியோகிக்கும் போட்டியில் மகிழ் அங்காடியும் இணைந்துகொண்டுள்ளது.
கிராமங்களில் கிடைக்கும் பாரம்பரிய உணவுப் பொருட்களை இணையவழி விற்பனை செய்வதில் மகிழ் அங்காடி மற்றுமொரு மைல் கல்லை எட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தனது உற்பத்திகளை மேற்கொண்டு வரும் மகிழ் அங்காடி சிறு தொழில் முயற்சியாளர்களின் முன்னேற்றம், இயற்கை உணவுகள் உற்பத்தி, பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
மகிழ் உணவுப் பொருட்களை www.magizhangadi.lk என்ற இணையத்தளம் ஊடாக நீங்களும் வீட்டில் இருந்தே உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.!