நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஏனோக் சிட்டி பகுதியில் இருந்து இந்த முக்கியமான செய்தி பதிவாகியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு அவரது 40 வயது மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற பின்னர், 42 வயதுடைய நபரும் அந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான சந்தேக நபர் பெண் மற்றும் ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார்.
உயிரிழந்த சிறுவர்கள் 4 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் அவரது மனைவியின் தாயாரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.