follow the truth

follow the truth

October, 25, 2024
Homeஉள்நாடுநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

Published on

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயங்க முடியும் என மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (05) புத்தளத்தை வந்தடைய உள்ளதாகவும், அதனை இறக்கிய பின்னர் ஆலையில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இருப்பு இருக்கும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதிக்குள் மேலும் 10 நிலக்கரி கப்பல்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதம் வரை நிலக்கரி இருப்பு போதுமானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஜெனரேட்டரை செயலிழக்கச் செய்ததன் மூலம், தேசிய மின்சார அமைப்பு 270 மெகாவாட் மின்சாரத்தை இழந்தது மற்றும் அந்தத் தொகையை வேறு மூலங்களிலிருந்து பெற வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ்...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக...

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...