follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுடயானா வழக்கில் இன்றைய உத்தரவு

டயானா வழக்கில் இன்றைய உத்தரவு

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தில் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும், அவற்றை விசாரிக்குமாறும் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உரிய தூதரக அறிக்கை கிடைத்த பின்னர் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பது இலகுவாக இருக்கும் எனவும் அதுவரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமானதல்ல எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் போது இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் அவசியமில்லை என தோன்றுவதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை...

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...

கசுன் மஹேந்திரவை கைது செய்தமை குறித்து பொலிசாரின் நிலைப்பாடு

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி...