அனுமதிப்பத்திரம் இன்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறு செய்வது தண்டனைக்குரியது எனவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரசபை கூறுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாத எந்தவொரு விமானப் பயணச்சீட்டு விற்பனை நிறுவனத்துடனும் விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்வது தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் மேற்கொள்ள வேண்டாம் என அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.