இலங்கை மின்சார சபை ஆகஸ்ட் மாதத்தில் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபையின் செயற்பாட்டு இலாபத்திற்கு காரணம் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பே தவிர கட்டண அதிகரிப்பு அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை முறையே 635.5 மற்றும் 655.0 கிகாவாட் மணிநேர நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் நீர் மின் உற்பத்தி 633.9 ஜிகாவாட் மணிநேரமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த மாதத்தில் கட்டணம் முழுமையாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை மின்சார சபையின் நட்டம் 9 பில்லியன் ரூபா என சபை உறுப்பினர் தெரிவிக்கிறார்..
“அமைச்சரே, இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் உங்கள் கணக்கைச் சரி செய்யுங்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.