கஞ்சிபானி இம்ரான் என்றழைக்கப்படும் நஜீம் மொஹமட் இம்ரானின் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் கஞ்சிபானி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரானின் தாய், சகோதரர் மற்றும் மற்றொரு நபர் ஜாமீன்தாரர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
கஞ்சிபானி இம்ரான் இலங்கையில் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், மேலும் அவர் ரூ. 5 மில்லியன் சரீரப் பிணையில் டிசம்பர் 20 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதோடு, அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ‘கஞ்சிபானி’ இம்ரான் ஐந்து நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக இந்திய உளவுத்துறை தமிழகத்தை உஷார்படுத்தியது.
நீதிமன்ற உத்தரவின்படி, கஞ்சிபானி இம்ரான் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தை பொலிஸில் ஆஜராக வேண்டும் என்றும், அவர் ஆஜராகத் தவறியதால், பொலிசார் நீதிமன்றில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இம்ரானின் தாய், சகோதரர் மற்றும் ஜாமீன்தாரர்களாக பட்டியலிடப்பட்டுள்ள மற்றொரு நபரை 2023 மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் நஜீம் முகமது இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைய தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், ஜாமீனில் வெளிவந்த அவர் எப்படி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் என்பதுதான் முக்கிய கேள்வி.
இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ‘கஞ்சிபானி’ இம்ரான் கடலோர ராமேஸ்வரம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து இந்திய உளவுத்துறை தமிழகத்தை உஷார்படுத்தியது.
கிறிஸ்மஸ் தினத்தன்று கடலோர நகரத்திற்குள் மற்றொரு நபருடன் இம்ரான் நுழைந்ததாக உளவுத்துறை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கஞ்சிபானி இம்ரான் இலங்கையில் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், மேலும் அவர் ரூ. டிசம்பர் 20 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் 5 மில்லியன் சரீரப் பிணையும், அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
பிரபல பாதாள உலகக் கும்பலும் போதைப்பொருள் தலைவருமான கஞ்சிபானி இம்ரான் என்ற மொஹமட் இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து, இலங்கை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (03) நாட்டின் புலனாய்வு வலையமைப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இணைப்புச் செய்தி
கஞ்சிபானி இந்தியாவுக்கு : உறுதியாக நம்பும் இந்தியப் புலனாய்வு