இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.