துனிசியா நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் முதல் பெண் பிரதமராக நஜ்லா போடன் ரோம்தானே (Najla Bouden Romdhane) பொறுப்பேற்க உள்ளார்.
வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டிற்கு முதல்முறையாக நஜ்லா பவுடன் ரோம்தனே என்ற பெண் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உயர் கல்வி அமைச்சகத்தின் இயக்குனரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர்.
கடந்த ஜூலை மாதம் நாட்டின் அதிபர் கயிஸ் சயித் முந்தைய அரசை கலைத்து உத்தரவிட்டதை அடுத்து 2 மாதங்களாக பாராளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.