ஈக்குவடோரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் Guayaquil நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் நேற்று முன்தினம் (28) இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வன்முறையினால் மேலும் 80 கைதிகள் காயமடைந்தும் உள்ளனர்.
சிறைச்சாலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கில்லர்மோ லாசோவின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.