follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுதேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் முறைப்பாடு

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் முறைப்பாடு

Published on

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், நிலவும் தேங்காய் விலையில் தங்கள் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களுக்கு பெரும் செலவை சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும், தற்போதைய மின்சார விநியோகத் தடை, மின்கட்டண அதிகரிப்பு என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மலையக மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு...

புதையலைத் தேடி நெடுஞ்சாலைக்கு அருகில் தோண்டும் பணி ஆரம்பம்

வேயங்கொட வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும்...

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்...