கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கொவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், புறப்படுவதற்கு முன், உரிய பரிசோதனை அறிக்கையை இந்திய அரசின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.